பேராவூரணி அருகே களத்தூர் கிராமத்தில் கிராம சபைக் கூட்டம்

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், களத்தூர் ஊராட்சி, நாடங்காடு கிராமத்தில், சுதந்திர தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், செல்வேந்திரன், சோகோ செயல் அலுவலர் சசிகுமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாரிமுத்து, ஆசிரியர் சரவணன், தொழிலதிபர் சிவமணி மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலர் வேதாச்சலம் நன்றி கூறினார்.
Next Story

