தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க 3 ஆவது வட்ட மாநாடு வட்டத் தலைவர் கணே.மாரிமுத்து தலைமையில் தலைமையில் நடைபெற்றது. வட்டச் செயலாளர் மணிவண்ணன், கும்பகோணம் வட்டத் தலைவர் துரைராஜ், செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜன் வரவேற்றார். மாவட்ட தணிக்கையாளர் சமுதாக்கனி சங்க கொடி ஏற்றினார். மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக தங்கராஜன், துணைத் தலைவர்களாக கணேசன், நமச்சிவாயம், செயலாளராக கண்ணப்பன், துணை செயலாளராக தங்கராசு, பொருளாளராக கண்ணை. கருப்பையன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் . மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் பண்டிகை போனசாக வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும். கம்யூடேசன் காலத்தை 15 ஆண்டிலிருந்து 10 ஆண்டாக குறைக்க வேண்டும். மருத்துவ சிகிச்சை திட்டம் ஓய்வூதியர்களுக்கு அனைத்து வகையிலும் பயன்பெறுமாறு பிற மாநிலங்களில் உள்ளதைப் போல தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் என்பது வருமானம் அல்ல என்பதால் ஓய்வூதியர்களுக்கு வருமான வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர் .
Next Story

