உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு மனைப்பட்டா, உழவர் அட்டை வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பயனாளிகளுக்கு மனைப்பட்டா, உழவர் அட்டை வழங்கல்
X
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை மாரியம்மன் கோயில் வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.  பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, 21 பேருக்கு  மனைப்பட்டா, 10 பேருக்கு உழவர் அட்டையை வழங்கிப் பேசினார்.  முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர், பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், சமூகப்பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் கவிதா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம், காவல் துறை உதவி ஆய்வாளர் ஜீவானந்தம்,  குருவிக்கரம்பை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வைரவன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வைரவன், குருவிக்கரம்பை சின்னப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மருத்துவ அலுவலர் ரேவதி தலைமையில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.  முகாமில், தேவை ஏற்படுவதற்கு முன்னதாக தேவையான ஆவணங்களை வழங்கி, அனைவரும் முதலமைச்சரின் காப்பீட்டு அட்டையை பெற வேண்டும். சிறுநீரக பாதிப்புடையோர், புற்றுநோய், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டோருக்கு மாதம் ரூ ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. பயனாளிகள் விவரம் ரகசியம் காக்கப்படும். தேவையுடையோர் பேராவூரணி சமூகப்பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், பல்வேறு துறைகளின் அலுவலர்கள் தங்கள் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.
Next Story