படைவெட்டி அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்கள் சிறப்பு அலங்காரம்

X
Komarapalayam King 24x7 |15 Aug 2025 8:58 PM ISTNo- 3 குமாரபாளையம் படைவெட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம் பக்தர்கள் சாமி தரிசனம்...
நாமக்கல் மாவட்டம் No.-3 குமாரபாளையம் த்தில் மிகவும் பிரசித்திபெற்ற படைவெட்டிஅம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. மேலும் தொடர்ந்து ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஒன்பதாம் ஆண்டாக ஸ்ரீ படைவெட்டி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் ஒரு லட்சம் வளையல்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் கூல் போன்றவை வழங்கப்பட்டது. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு காடை குல பெண் வாரிசுகள் மூலம் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
Next Story
