ஸ்ரீ வடமாரியம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..

ஸ்ரீ வடமாரியம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..
X
ஸ்ரீ வடமாரியம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வடமாரி அம்மன் திருக்கோவிலில் இன்று ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையை ஹரி பூசாரி நடத்தினார். இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், நல்ல மழைப்பொழிவு ஏற்படவும், குழந்தைகளுக்கு கல்வி செல்வம், மாங்கல்ய பாக்கியம் ஆகியவை வேண்டி திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வேண்டினர். தொடர்ந்து ஸ்ரீ வட மாரியம்மன் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்... மேலும் இந்த திருவிளக்கு பூஜைகள் பங்கேற்ற பெண்களுக்கும் , இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் முன்னாள் திமுக கவுன்சிலர் ராம்குமார் அனைத்து புடவைகள் இலவசமாக வழங்கினார். மேலும் சுமங்கலி பெண்களுக்கு வளையல்களும் வழங்கப்பட்டது.
Next Story