ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது போல தீய எண்ணங்களில் இருந்து விடுதலை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.
வாலிகண்டபுரம் பள்ளியில் சுதந்திர தின விழா பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 15.8.2025 அன்று 79 ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் க. செல்வராசு அவர்கள் உரையாற்றும் பொழுது ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது போல தீய எண்ணங்களில் இருந்து விடுதலை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னாள் மாணவர் பாலுசாமி அவர்கள் பேசும்பொழுது பல்வேறு தடைகளைத் தாண்டி கல்வி பெற்று தாம் வாழ்வில் உயர்ந்த நிலையை எடுத்துரைத்தார் முன்னாள் மாணவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் உரையில் கல்வியை திறம்பட கற்றால் உயர் கல்வியில் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டினார். பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் அமராவதி, துணைத்தலைவர் பிச்சை பிள்ளை, கல்வியாளர் சையத் உசேன் , உசேன், தினேஷ் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்வில் மாணவ மாணவிகள் சுதந்திர தினத்தின் சிறப்புகளை சொற்பொழிவாக வழங்கினர். 7.5 % சதவீத இட ஒதுக்கீட்டில் அண்ணா பொறியியல் கல்லூரியில் இடம்பெற்ற மாணவி ஆப்ரின் பேகம் அவர்களுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்புற நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் வீரையன், ராதிகா உள்ளிட்ட ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர். நிகழ்ச்சிகளை வேதியியல் ஆசிரியர் வரதராஜ் தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வீரையன் நன்றி கூறினார். நாட்டுப்பண் பாட விழா இனிதே நிறைவு பெற்றது.
Next Story




