புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் சார்பில் சுதந்திர தின விழா

X
தூத்துக்குடியில் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் அழகப்பா கல்வி மையத்தின் மாடியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நற்பணி மன்றம் தலைவர் எழுத்தாளர் மாரிமுத்து அறிமுக உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள் என்ற தலைப்பில் தமிழ் செம்மல் முத்தாலங்குறிச்சி காமராஜ் சிறப்புரையாற்றினார். அவருக்கு கருவூலத்துறை ஓய்வு பெற்ற அலுவலர் ஷெரீப் நினைவு பரிசு வழங்கினார். பெருங்குளம் மணி மொழிச் செல்வம் புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் எழுத்தாளர் மாரிமுத்து. குமிழ்முனை புத்தக வண்டி நிறுவனர்சைமன், கவிஞர் செல்வராஜ், இலக்கிய ஆர்வலர் பத்மநாபன், வழக்கறிஞர் பாலசேகர். கலை வளர்மணி சக்திவேல் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
Next Story

