வாணியந்தலில் கிராம சபை கூட்டம்

X
வாணியந்தல் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபைக் கூட்டம் நடந்தது. வாணியந்தல் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சியில் துாய்மையான குடிநீர் விநியோகம் உறுதி செய்வது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தொடர்பான விபரங்கள். ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
Next Story

