முதல்வர் கோப்பை போட்டிகள்

முதல்வர் கோப்பை போட்டிகள்
X
போட்டிகள்
முதல்வர் கோப்பை போட்டிகளுக்கான முன்பதிவுசெய்திட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக செய்திக்குறிப்பு: மாநில, மண்டல, மாவட்ட அளவிலான தமிழக முதல்வர் கோப்பை - 2025 விளையாட்டு போட்டிகளுக்கான இணைய தள முன்பதிவு கடந்த ஜூன் 14ம் தேதி முதல் ஆகஸ்ட் 16ம் தேதி வரை செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை முன்பதிவில் கிடைக்கப்பெற்ற வரவேற்பினை தொடர்ந்து பள்ளி, கல்லுாரி, மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கிணங்க இணைய தளமுன்பதிவு செய்திட கால அவகாசம் வரும் 20ம் தேதி இரவு 8:00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லுாரிமூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்டவிளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 95140 00777 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story