குமரிமேற்கு மாவட்ட த வா க நிர்வாகிகள் கூட்டம்

குமரிமேற்கு மாவட்ட த வா  க நிர்வாகிகள் கூட்டம்
X
நித்திரவிளை
தமிழக வாழ்வுரிமை கட்சியின் குமரி மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று 15-ம் தேதி  மாலையில் நித்திரவிளையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட செயலாளர்  பிரனேஷ்குமார் தலைமை தாங்கினார். தலைவர்  பென்னட்  முன்னிலையில்  மாநில துணை தலைவர்  சோ.சுரேஷ்  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பொருளாளர்  கிறிஸ்துராஜ், கிள்ளியூர் தொகுதி தலைவர் ஆல்பர்ட்ராஜ், கொல்லங்கோடு நகர செயலாளர்  பாபு   சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் தமிழக வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை வலியுறுத்தி  வரும் 19/08/2025 அன்று சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நடக்கவிருக்கும்  நீதி கேட்கும் போராட்டத்தில் குமரி மேற்கு மாவட்டத்தில் இருந்து 200 நபர்  கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Next Story