பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து ஆளுநருமான இல.கணேசன் மறைவு - நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மெளன அஞ்சலி!

நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் கே.பி.சரவணன் தலைமையில் மணிக்கூண்டு அருகில் அலங்கரிக்கபட்டு இருந்த இல.கணேசன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாகலாந்து மாநில ஆளுநராக பதவி வகித்துவந்த இல.கணேசன், ஆகஸ்ட் 8-ம் தேதி தனது வீட்டில் வழுக்கி விழுந்ததில் காயமடைந்தார். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் -15 வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். சென்னை தி.நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்...இதன் ஒரு பகுதியாக நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் மணிக்கூண்டு அருகில் அலங்கரிக்கபட்டு இருந்த இல.கணேசன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.முன்னதாக, இல. கணேசனின் அரசியல் பணிகள் குறித்து பாஜக நிர்வாகிகள் புகழாரம் செலுத்தி பேசுகையில்.‌.
பாஜகவின் மூத்த தலைவர், கட்சிப் பணிக்காக திருமணம் செய்து கொள்ளாமல் உழைத்தவர், பாஜக வளர்ச்சிக்காகவும் தமிழ் மண்ணின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து கடுமையாக உழைத்தவர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாததது
ஆகும் என்றும் கூறினார்கள்.இந்த நிகழ்வில் பாஜக மூத்த வழக்கறிஞர் கி.மனோகரன், கிழக்கு மாவட்ட செயலாளர்கள் யுவராஜ், ஜெயா,முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகுமார், ஆர்எஸ்எஸ் கோட்ட தலைவர் சுப்பிரமணியம், நாமக்கல் நகர பொதுச் செயலாளர் சதிஷ்குமார் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
Next Story