கோவை: பிரிட்டிஷ் பட்டு உடுத்தி அம்மனுக்கு பூஜை !

X
கோவை மாவட்டம் சூலூர் அருகே வதம்பச்சேரி நல்லூர் பாளையத்தில் உள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவிலில், பிரிட்டிஷ் காலத்தில் காணிக்கையாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பட்டுப் புடவையுடன் அம்மன் அருள்பாலித்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பெண்கள் அடைக்கலம் புகுந்த இந்தக் கோவிலில், படையினரின் வேண்டுதலுக்குப் பின் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட புடவை என நம்பப்படுகிறது. அந்தச் சிறப்புமிக்க சேலை, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின் முதல் மற்றும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. அதன்படி, ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மன் பட்டு சேலையில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சியை அப்பகுதி மக்கள் திரளாகக் கண்டுகளித்தனர்.
Next Story

