கோவை காந்திபுரம் கைதிகள் ஓட்டல் தற்காலிகமாக மூடல் !

X
கோவை மத்திய சிறையில் பயிற்சி பெறும் கைதிகள் நடத்தி வந்த காந்திபுரம் சிறை அங்காடி வளாகத்தில் உள்ள டீக்கடை மற்றும் ஓட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறைந்த விலையில் உணவு, டீ, காபி வழங்கப்பட்டதால் பயணிகள், போக்குவரத்து கழக ஊழியர்கள் உள்ளிட்டோர் அதிகம் பயன்படுத்தி வந்தனர். சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் இன்று தெரிவித்ததாவது, ஆள்பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விரைவில் நன்னடத்தை கைதிகளைத் தேர்வு செய்து மீண்டும் செயல்படுத்தப்படும் என்றார்.
Next Story

