கோவை: கார் டிரைவர் மீது தாக்குதல் : போத்தனூரில் பரபரப்பு

X
கோவை சுந்தராபுரம் மதுக்கரை சாலையைச் சேர்ந்த நித்தியானந்தம் (35) கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று அவர் வெள்ளலூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த ஒருவர், நித்தியானந்தத்துடன் தகராறு செய்ததுடன், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து நித்தியானந்தம் அளித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

