ரெப்கோ ஹோம் நிதி நிறுவனத்தில் வீட்டுக்கடன் வழங்கும் முகாம்

ரெப்கோ ஹோம் நிதி நிறுவனத்தில் வீட்டுக்கடன் வழங்கும் முகாம்
X
முகாமில் வீடு கட்ட கடன் பெற்ற பொதுமக்கள்
ரெப்கோ ஹோம் நிதி நிறுவனத்தில் சேலம், நாமக்கல் பகுதிகளில் உள்ள கிளைகளான சேலம் மெயின், கொண்டலாம்பட்டி, ஆத்தூர், மேட்டூர், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபும் கிளைகளில் வீட்டு வசதி கடன் வழங்கும் முகாம் நடந்தது. நாமக்கல்லில் நடந்த முகாமில் சிறப்பு விருந்தினராக பி.எஸ்.மோகன் கலந்து கொண்டார். முகாமில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வீட்டுக்கடன்களை பெற்றுக்கொண்டனர். இந்த முகாம் குறித்து சேலம் மண்டல வளர்ச்சி மேலாளர் கார்த்தி கூறுகையில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடந்த வீட்டுவசதி கடன் வழங்கும் முகாம்களில் ரூ.50 கோடிக்கும் மேலான கடன் விண்ணப்பத்துக்கான முன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டுக்கடன் வேண்டுவோர் சம்பந்தப்பட்ட கிளைகளை அணுகி குறைந்த வட்டியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
Next Story