சேலத்தில் மயானத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

சேலத்தில் மயானத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி
X
அருள் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட அண்ணா நகர், காமராஜர் காலனி ஆகிய பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் செங்கல்பேட்டையில் நிழற்கூடம் அமைப்பதற்காக மேற்கு சட்டசபை உறுப்பினர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில் அருள் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அந்த பகுதி மக்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கார்த்தி, மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணாம்பாள், துணை செயலாளர் கலைவாணன், செயற்குழு உறுப்பினர் குணா, கோட்ட செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் சுமன், மூத்த நிர்வாகிகள் அங்கமுத்து, சீனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story