ஏற்காடு வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமை

ஏற்காடு வனப்பகுதியில் இறந்து கிடந்த காட்டெருமை
X
வனத்துறையினர் விசாரணை
ஏற்காடு சேர்வராயன் வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஏற்காடு வனச்சரக அலுவலர் முருகன், வனவர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது காட்டெருமை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் காட்டெருமைக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக இறந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story