சுதந்திர தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

சுதந்திர தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
X
சுதந்திர தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு, மலையடி வேண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், சுதந்திர தின விழாவையொட்டி, நேற்று காலை 9:05 மணிக்கு, கலெக்டர் சினேகா தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், 73 பயனாளிகளுக்கு 75.74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சப் - கலெக்டர் மாலதிஹெலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், இந்தியா - பாகிஸ்தான் போர் நினைவுச்சின்னம் பூங்காவில், செங்கல்பட்டு முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில், சுதந்திர தின விழா நடந்தது. ஓய்வுபெற்ற ராணுவ கர்னல் அலெக்ஸ் சந்திரன் பங்கேற்று, தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
Next Story