ராமநாதபுரம் மூடப்படாத ரயில்வே கேட்டால் பரபரப்பு

ரயில் வந்த போது மூடப்படாத வழுதூர் ரயில்வே கேட் சேது ரயில் இன்ஜின் ஓட்டுநர் இறங்கி கேட்டை மூடியதால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் அனைத்தும் ராமநாதபுரம், வாலாந்தரவை உச்சிப்புளி, பாம்பன் உள்ளிட்ட ரயில் நிலையங்களை கடந்து ராமேஸ்வரம் வந்து செல்கிறது. இந்நிலையில் நேற்று சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்ட சேது விரைவு ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வழுதூர் ரயில்வே கேட் அருகே வந்த போது அப்பகுதியில் இருந்த ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை கண்டு ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார் சுதாரித்துக் கொண்ட சேது விரைவு ரயில் இன்ஜின் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டு கிழே இறங்கி வந்து கேட்டை மூடி விட்டு ரயில் இன்ஜினை இயக்கி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது கேட்டு மூடப்படாமல் இருந்ததால் அப்பகுதியில் வந்த வாகனங்கள் ரயில்வே தண்டவாளம் அருகே வந்து ரயில் வருவது அறிந்து சிதறி ஓடினர் இதுகுறித்து தெற்கு காட்டூர் பகுதியில் சேர்ந்த துரை என்பவர் கூறுகையில் நாங்கள் வழுதூர் ரயில்வே கேட்டில் இரு சக்கர வாகனத்தை கடந்து செல்ல முற்படும் பொழுது திடீரென ரயில் வந்ததால் பதறி அடித்து திரும்பி விட்டோம் என்னைப் போன்று இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களும் அப்பகுதியில் நின்றது ரயில் ஓட்டுநர் சுதாரிப்பு ரஞ்சினை நிறுத்தியதால் உயிர் தப்பினோம் இதுபோன்ற சம்பவம் பெரும் கண்டனத்திற்குரியது ரயில்வே துறை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாகவும் இருக்க வேண்டும் ரயில் ஓட்டுநர் இன்ஜினை நிறுத்திவிட்டு ரயில்வே கேட் அடைத்து விட்டு மீண்டும் இஞ்சினை இயக்கிச் சென்றதால் பெரும் பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டது இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காத வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார் ரயில்வே கேட் மூடப்படாத குறித்து கேட் கீப்பரிடம் கேட்டபோது தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக கேட்டை மூடவில்லை என தெரிவித்துள்ளார்.வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு குறைந்த எண்ணக்கையில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் சேது விரைவு ரயில் தினசரி ரயில் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் ரயில்வே கேட்டை கடந்து செல்வது வழக்கமான ஒன்றாக இருக்கும் போது எப்படி தகவல் பரிமாற்றத்தில் கோளாறு ஏற்படும் எனவே ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால் மூடப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ரயில் எஞ்சின் ஓட்டுனரின் சாதுரியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Next Story