ராமநாதபுரம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்

X
ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயம் பள்ளியில் கிருஷ்ணரை போற்றும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை பள்ளியின் மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி அம்மா அவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்க, இந்நிகழ்ச்சியினை பள்ளி முதல்வர் திருமதி கோகிலா மற்றும் பள்ளி துணை முதல்வர் தீரஜ் லட்சுமண பாரதி ஆகியோர்கள் தலைமை தாங்கிட விழாவானது அதிவிமர்சியாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் பள்ளி மழலையர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து, கிருஷ்ணரைப் பற்றிய நாடகம், நடனம், இசை நிகழ்ச்சி மற்றும் வில்லுப்பாட்டு என பல்வேறு கலை நிகழ்வுகளை நடத்தி காட்டினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் உறியடித்தலும் மாணவியர்கள் கயிறு இழுத்தல் போட்டியும் ஆரவாரத்துடன் நடைபெற்று முடிந்தது.
Next Story

