திமுக சட்டத்துறை சார்பில்,பாக முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம்

X
காஞ்சி தெற்கு மாவட்டம்,அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக சட்டத்துறை சார்பில்,பாக முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம்,எல். எண்டத்தூர் கிராமத்தில் ஒன்றிய கழக செயலாளர் ஜீ.தம்பு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சி தெற்கு மாவட்ட சட்டத்துறை அமைப்பாளர் கண்ணன், மதுராந்தகம் தேர்தல் பொறுப்பாளர் சாரதி மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு கழக ஆக்கப் பணிகள் குறித்தும் சட்டத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் டி.ஆர்.நாராயணன், சிவபெருமான், மொ.கோ.மணி, வேணு, இளங்கோ, கோபி, சிலம்பரசன், ராமதாஸ், சரத்குமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

