ஜலகாம்பாறை முருகர் கோவிலில் ஆடி கிருத்திகையான இன்று பக்தர்கள் தேர் இழுத்து காவடி எடுத்து திரளானோர் சாமி தரிசனம்!

X
திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை முருகர் கோவிலில் ஆடி கிருத்திகையான இன்று பக்தர்கள் தேர் இழுத்து காவடி எடுத்து திரளானோர் சாமி தரிசனம்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் பிரசித்தி பெற்ற முருகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதத்தில் ஆடி கிருத்திகையில் ஜலகாம்பரை முருகனுக்கு சிறந்த வழிபாடுகள் நடத்துவது வழக்கம் இந்த நிலையில் ஆடி கிருத்திகையான இன்று முருகருக்கு அலங்காரம் செய்து அபிஷேகங்கள் நடைபெற்றன இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து பக்தர்கள் அழகு குத்தியும் தேர் இழுத்து காவடி மற்றும் மயில் காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர் சுமார் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று அரோகரா அரோகரா என்று பக்தி மணக்க காவடி விருத்தம் பாடி சாமி தரிசனம் செய்தனர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருக்கோலத்தில் வள்ளி தெய்வானையுடன்திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து கொண்டிருக்கும் முருகன் அருளை பெற்று சென்றனர் மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது
Next Story

