முன்னாள் காதலியை சரமாரியாக வெட்டியவர் கைது

X
குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜாண்கிறிஸ்டோபர் (57). இளமைப் பருவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த ஜாண்கிறிஸ்டோபர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியை வெட்டிய வழக்கு தற்போது நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று மீண்டும் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டுக்குள் நுழைந்த ஜாண் கிறிஸ்டோபர் கோர்ட்டில் சாட்சி சொல்ல கூடாது என கூறி, அரிவாளால் திடீரென அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றார். உடலில் 15 இடங்களில் வெட்டு காயம் விழுந்து உயிருக்காக போராடியவரை குமரி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். புகாரின் பேரில் தக்கலை போலீசார் ஜாண் கிறிஸ்டோபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

