காவேரிப்பட்டணம் அருகே கடனை திருப்பி தராத பெண்ணை தாக்கியவர் கைது.

காவேரிப்பட்டணம் அருகே கடனை திருப்பி தராத பெண்ணை தாக்கியவர் கைது.
X
காவேரிப்பட்டணம் அருகே கடனை திருப்பி தராத பெண்ணை தாக்கியவர் கைது.
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள கொல்கொத்துார் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் பன்னிஅள்ளியை சேர்ந்த செல்வம்(45) இவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. சம்பவம் அன்று 1.70 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். அதனால் மீதி தொகையை கேட்டு தகராறு செய்த செல்வம், பழனியம்மாளை தாக்கியுள்ளார். இதுகுறித்து பழனியம்மாளின் தந்தை பெருமாள்(70) காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகார் ரில் போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.
Next Story