தந்தையை இழந்து தவித்த மாணவர் கல்வியை தொடர கலெக்டர் உதவி

தந்தையை இழந்து தவித்த மாணவர் கல்வியை தொடர கலெக்டர் உதவி
X
இயலாத நிலை என்றும், தனது மகனுக்கு கல்விக்கட்டணம் கட்ட உதவிடும்படி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்த கலெக்டர் ச.அருண்ராஜ் மாணவன் சஞ்சய்க்கு தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.55,000 வழங்கினார்.
தந்தையை இழந்து தவித்த மாணவர் கல்வியை தொடர கலெக்டர் உதவி! பொதுமக்கள் பாராட்டு! பெரம்பலூர், வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த பிரபாவதி என்பவர் தனது மகன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பாடப்பிரிவில் 2ம் ஆண்டு படித்து வரும் நிலையில் தனது கணவர் இறந்துவிட்டதால் குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர இயலாத நிலை என்றும், தனது மகனுக்கு கல்விக்கட்டணம் கட்ட உதவிடும்படி கோரிக்கை வைத்தார். அவரது இயலாத நிலை என்றும், தனது மகனுக்கு கல்விக்கட்டணம் கட்ட உதவிடும்படி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்த கலெக்டர் ச.அருண்ராஜ் மாணவன் சஞ்சய்க்கு தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.55,000 வழங்கினார். மாணவர்களுக்கு கல்விக்காக தொடர்ந்து உதவி வரும் கலெக்டர் அருண்ராஜ், உதவிபெறும் மாணவர்களிடம் கல்வி ஒன்றுதான் நம்மிடமிருந்து யாராலும் அழிக்க முடியாத, பிரிக்க முடியாத சொத்து, எந்த காரணத்திற்காகவும் படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்றும், தொடர்ந்து படித்து சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாகி நீங்களும் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என அறிவுரை வழங்கினார். பயனடைந்த மாணவ மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் கலெக்டருக்கு தங்களது நன்றிகளைதெரிவித்துக் கொண்டனர். முன்பு இருந்த கலெக்டர் கிரேஸ் பொதுமக்களிடமே பேசவே தயக்கம்காட்டி சுமார் 10 மாதங்களில் சிறப்பான செயல்பாடு இல்லாத காரணத்ததால் பெரம்பலூர் மாவட்டத்தின் வளர்ச்சி பின்னடைவை சந்தித்துவிட்டதாக தெரிவிக்கும் பொதுமக்கள் தற்போது வந்துள்ள புதிய கலெக்டர் அருண்ராஜ் கல்விக்காக உதவி கேட்டுவரும் எந்த ஒரு மாணவருக்கும் அவர்களின் நிலை உணர்ந்து தொடர்ந்து உதவி வரும் செயலை பொதுமக்கள் மனதார பாராட்டுகின்றனர்.
Next Story