பணம் வைத்து சூதாட்டம் ஆடிய மூவர் கைது

பணம் வைத்து சூதாட்டம் ஆடிய மூவர் கைது
X
குமாரபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். குமாரபாளையம் அருகே சூரியகிரி மலை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். நேரில் சென்ற போலீசார், குமாரபாளையத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தினேஷ், 28, லாரி டிரைவர் முருகன், 45, கூலித் தொழிலாளி ஆனந்த்குமார், 29, ஆகிய மூவரை கைது செய்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story