கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.
மதுரை மேலூர் தாலுகா கச்சிராயன்பட்டி சேகரம், க. கல்லம்பட்டியில் அமைந்திருக்கும் ஸ்ரீ மாயக்கண்ணன் திருக்கோவிலின் யாதவ குல மக்களால் நடத்தும் 18ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் காப்பு கட்டி மாலை அணிந்து 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர். கிருஷ்ண கோவில் முன்பு விளக்கு பூஜை நடைபெற்றது. கிருஷ்ண கோவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பின்பு கோவில் வந்தடைந்தனர். கிருஷ்ணனுக்கு பாலாபிஷேகம், அலங்கார தீபாராதனை, உரியடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் அருகே சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டு நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை க. கல்லம்பட்டி யாதவ குல மக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story



