சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

X
Pallipalayam King 24x7 |16 Aug 2025 9:07 PM ISTசமய சங்கிலி கிராமத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது
இந்திய தேசத்தின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சி பள்ளிபாளையம் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக சமய சங்கிலி ஆரம்ப ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சுதந்திர தின விழா கொடியேற்றுதல் விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் மாணவர் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளிபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.எஸ்.செல்வா தலைமை வகித்தார் . ஒன்றிய தலைவர் பம்பாய் முருகன், மாவட்ட துணை செயலாளர் கராத்தே என்.சேகர், மாவட்ட மாணவர் அணி தலைவர் டி.செந்தில்நாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் . சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் க.உமாசங்கர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு இனிப்புளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜயகுமார், விஜயராகவன், பூபதி சின்னதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
