மதுராந்தகம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகல கொண்டாட்டம்

மதுராந்தகம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகல கொண்டாட்டம்
X
மதுராந்தகம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவில் இளைஞர்கள் உரியடித்தும் சறுக்கு மரம் ஏறியும் திறமைகளை வெளிப்படுத்தினர்
மதுராந்தகம் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவில் இளைஞர்கள் உரியடித்தும் சறுக்கு மரம் ஏறியும் திறமைகளை வெளிப்படுத்தினர் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சிக்குட்பட்ட மேலவலம் பேட்டை கிராமத்தில் 35-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவானது கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.இதனைத் தொடர்ந்து கிருஷ்ணர் ஜெயந்தி விழாவான இன்று உரியடி நிகழ்ச்சி மற்றும் சறுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு உறியடித்தனர். பல இளைஞர்கள் சறுக்கு மரம் ஏறி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story