பெற்ற பிள்ளைக்கு முன் உதாரணமாக இருந்த தந்தை

பெற்ற பிள்ளைக்கு முன் உதாரணமாக இருந்த தந்தை
X
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகன் பிறந்த நாளில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார்
மகன் பிறந்த நாளில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இரத்தம் கொடை வழங்கி உதவிய செங்குணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுள்பாளையம் பெண் ஒருவருக்கு 2025 ஆகஸ்ட் 15 இன்று செங்குணம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ம.ப.தனராசு அவர்கள் தனது மகன் முகில்ராஜ்-ன் இன்றைய பிறந்த நாள் மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி பிரிவில் ஏ-பாசிடிவ் வகை இரத்தம் கொடை வழங்கி உதவினார். இது இவரின் 14 வது முறை இரத்த தானம் ஆகும். பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன், குருதி ஏற்பாட்டாளர் வதிரம் நாகராஜ், , தொடர் குருதி கொடையாளர்கள் மகேஸ்குமரன், சபரி துரைராஜ் மற்றும் செங்குணம் குமார் அய்யாவு உட்பட பலரும் வாழ்த்தி பாராட்டினார்.
Next Story