தேசியத் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றி விழா
கரம் கொடு மனிதா அறக்கட்டளையின் வள்ளலார் கல்வி மையத்தில் பயின்று தேசியத் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றி விழாவானது பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் பகுதியில் இயங்கி வருகின்ற வள்ளலார் கல்வி மையத்தில் 16.08.2025 நடைபெற்றது.நிகழ்வின் முன்னதாக கலையரசி வானொலி அறிவிப்பாளர் வரவேற்றார்கள்.கரம் கொடு மனிதா அறக்கட்டளை நிறுவனர் பிரபாத் தலமையில் நடைபெற்ற விழாவில் பயிற்சி மையத்தின் பயிற்றுநர் வசந்தகுமார் நோக்கவுரை வழங்கினார்.அரும்பாவூர் உன்னை அறிந்தால் மாணவர் கல்வி மேம்பாட்டு மைய கலைநாதன் அவர்கள் முன்னிலையில் எண்ணங்களின் சங்கமம் நிறுவுனர் ஜெ.பிரபாகர் சிறப்புரையாற்றி மாணவர்களை வாழ்த்தினார்கள்.மேலும்,நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களை பயிற்சி மையத்தின் பயிற்றுனர்களான முனைவர்.முத்துமாறன் வாழ்த்தி சிறப்பித்தார்கள். தேசியத் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.மாணவர்களின் ஏற்புரையோடு நிகழ்வின் இறுதியாக பயிற்றுநர் பாக்கியலட்சுமி நன்றியுரை வழங்கினார்கள்.மேலும்.நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்கள்,அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
Next Story






