தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்

X
மன்னார்குடியில் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளும் பாஜக அரசின் முறைகேடுகளுக்கு ஆதரவாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுவதாக கூறி தேர்தல் ஆணையத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது காங்கிரஸ் கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ் எம் பி துறைவேலன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மன்னார்குடி தேரடி காந்தி சிலை அருகே கைகளில் மெழுகுவர்த்தியை ஏந்தி இந்திய தேர்தல் ஆணைய முறைகேடுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இதனை தொடர்ந்து பெரியார் சிலை பெரிய கடை தெரு பந்தலடி வழியாக வெண்ணெய் தாழி மண்டபம் எதிரே உள்ள காந்தி சிலையில் பேரணி நிறைவுற்றது.
Next Story

