வலங்கைமானில் உடனடியாக மின் மாற்றி பொருத்த சி.பி.எம் வலியுறுத்தல்

வலங்கைமானில் உடனடியாக மின் மாற்றி பொருத்த சி.பி.எம் வலியுறுத்தல்
X
வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்ய கொண்டு வரப்பட்ட மின் மாற்றியை காலதாமதம் இன்றி பொருத்த சிபிஎம் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 14- வது வார்டு கோவில் பத்து பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கோவில் பத்து மற்றும் பாதிரிபுரத்திற்கு இடையே சாலை ஓரங்களில் மின் கம்பங்கள் அருகருகே இல்லாமல் தொலைவில் அமைந்துள்ளது. எனவே பொதுமக்களின் நலம் கருதி மின்கம்பங்களை அருகருகே அமைத்து தெரு மின் விளக்குகளை பொறுத்திட வேண்டும் எனவும் இந்த குறைந்த மின் அழத்தத்தினை சரிசெய்ய வேண்டும் என சிபிஎம் கட்சியின் சார்பில் முன்னதாக போராட்டம் நடைபெற்ற நிலையில் கோவில் பத்து பகுதியில் அமைப்பதற்கு என புதிதாக மின் மாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொண்டு வரப்பட்டது. இருப்பினும் மின்மாற்றி இதுவரை பொறுத்தப்படாததால் குறைந்த மின் அழத்தமே தொடர்ந்து நிலவுகிறது. எனவே இக்குறையினை களையும் பொருட்டு மேலும் காலதாமதம் இன்றி மின்மாற்றியினைப் பொருத்தி மின் விநியோகத்தை சீராக்கிட சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முரளி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் மின்மாற்றிப் பொருத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து மின்சார வாரியத்தினர் கூறுகையில் வேளாண்மை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மின்கம்பம் பொருத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அறுவடை பணிகள் முடிவுற்ற பின்னர் விரைவில் புதிய மின்மாற்றி பொருத்தப்படும் என கூறியுள்ளனர்.
Next Story