சுசீந்திரம் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை வழிபாடு

X
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் மரபு படி வருடம் தோறும் ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தை ஒட்டி ஆடி கிருத்திகை வழிபாடு நடைபெறுவது வழக்கம். இன்று ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரம் என்பதால் நேற்று மாலை 5.30மணிக்கு கோவில் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பெண்கள் கோயில் உட்பிரகாரம் அமைந்துள்ள சாஸ்தா சன்னதி முன்பு வரிசையாக அமர்ந்து 1008திருவிளக்குகள் வைத்து திருவிளக்குகளுக்கு சந்தனம் குங்குமம் இட்டு பூஜைகள் செய்தனர். பின்பு மந்திரங்கள் பக்தி பாடல்கள் பாடி திருவிளக்குகளுக்கு தீபாதரனை செய்து வழிபாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி அருகே உள்ள கிராம பெண்கள் ஆதிபராசக்தி மகளிர் மன்றத்தினர் கலந்து கொண்டனர்.
Next Story

