காஷ்மீரில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு ஆப்பிள் வரத்து அதிகரிப்பு

X
இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், காஷ்மீரில் அதிகளவில் ஆப்பிள் மரங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பரில் மாதங்களில் ஆப்பில் விளைச்சல் அமோகமாக இருக்கும். தற்போது இமாச்சல பிரதேசம், காஸ்மீரில் ஆப்பிள் அமோக விளைச்சல் தந்துள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து இந்தியா முழுவதும் ஆப்பிள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அந்த வகையில் இமாச்சல பிரதேசம், காஷ்மீரில் இருந்து நாள் ஒன்றுக்கு சேலம் மார்க்கெட்டுக்கு 50 முதல் 60 டன் ஆப்பிள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு விற்பனைக்கு வரும் ஆப்பிளை நாமக்கல், மேட்டூர், ஆத்தூர், ராசிபுரம், திருச்செங்கோடு உட்பட பல்வேறு பகுதியில் உள்ள சிலரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஆப்பிள் சீசன் களைக்கட்டி உள்ளதால் விலை சரிந்துள்ளது. ஜூலை மாதத்தில் ரூபாய் 140 முதல் ரூபாய் 160 வரை விற்கப்பட்ட ஆப்பிள் தற்போது கிலோ ரூ.100 முதல் ரூ.120 என விற்கப்படுகிறது. சிறிய ரக ஆப்பிள் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story

