வக்கீல் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

வக்கீல் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது
X
தாராபுரத்தில் கடந்த மாதம் வக்கீலை வெட்டி கொலை செய்த வழக்கில் மேலும் இரண்டு நபர்களை கைது செய்தது தாராபுரம் காவல் துறை
தாராபுரத்தை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் முருகானந்தம். கடந்த மாதம் 28-ந்தேதி இவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உறவினர் தண்டபாணி உள்பட 15பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தகுமார் என்கிற குமரேசன் (வயது 31), நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த மகேஷ் ( 35) ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் திருச்சியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story