சாலையை சீரமைக்க வேண்டும்: வாலிபர் சங்கம் கோரிக்கை

X
தூத்துக்குடி மாநகராட்சி, பி அன்டு டி காலனி 7வது தெருவில் பிரதான சாலையின் ஒரு பக்கம் நீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இன்னொரு பக்கம் மதுவிலக்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட வாகனமும் பல நாட்கள் கடந்து அங்கே நிறுத்தப்பட்டு உள்ளது வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் கடுமையான நெருக்கடியை உருவாக்குகிறது. இதனால் அந்த சாலையை பயன்படுத்துவதை மக்கள் தொடர்ந்து தவிர்க்க வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலையை சீரமைத்திட வேண்டும் மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருக்கிற வாகனத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி மாநகர் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

