ட்ரோன் கண்காணிப்பு குழு: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்

X
திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய வளாகத்தில் புதிய ட்ரோன் கண்காணிப்பு குழுவை மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய ட்ரோன் கண்காணிப்பு குழுவை மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய வளாகத்தில் துவக்கி வைத்தார். பின்னர் அவர், இந்த ட்ரோன் கண்காணிப்பு குழுவினர் விழா கால நேரங்களில் மக்கள் கூட்டத்தை கண்காணிக்கவும் கூட்டத்தில் கலந்துள்ள அசம்பாவிதம் செய்யும் நபர்களை கண்டறியவும், பேரிடர் மீட்பு காலங்களில் உபயோகப்படுத்தி மக்களைக் பாதுகாக்கவும் மற்றும் காப்பாற்றவும் இனிவரும் காலங்களில் எந்தவித அசம்பாவிதமும் நடவாமல் தடுப்பதற்காகவும் செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில், சைபர் கிரைம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர், திருச்செந்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார் திருச்செந்தூர் இணை இயக்குனர் ஞானசேகரன் உட்பட பலர உடனிருந்தனர்.
Next Story

