தர்மபுரியில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்

தர்மபுரி மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதலமைச்சர்
தருமபுரி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் அரசு விழாவில் புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன் படி அரூர் வருவாய் வட்டத்துடன் சித்தேரி பகுதியைச் சேர்ந்த கிராமங்கள் இணைக்கப்படும். ஒகேனக்கல் அருகே 28 கி.மீ.தொலைவு சாலை 4 வழிச் சாலையாக மாற்றப்படும். நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்,ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும், அரூர் நகராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Next Story