ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ முகாம்

X
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ முகாம் இன்று ஞாயிற்று கிழமை துவங்கியது. மருத்துவ முகாமை அய்யா வைகுண்டர் அன்புவனம் நிறுவனர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிர்வாகி பேராசிரியர் ஆர் தர்ம ரஜினி முன்னிலை வகித்தார். தமிழக அரசின் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி கோட்டாறு மருத்துவமனை ஆயுர்வேத மருத்துவர் டாக்டர்கள் ரமேதா, சுனில் ராஜ், ராமராஜூ தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கி வருகின்றனர். அது போன்று கன்னியாகுமரி மாவட்டம் வீரபத்திரன் சித்த மருத்துவமனை சார்ந்த டாக்டர் விக்னேஷ் வீரபத்திரன், டாக்டர் சைலின், டாக்டர் சுஷ்மா தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் சித்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருத்துவ முகாம் நடத்தினர். விழா ஏற்பாடுகளை அன்புவனம் மற்றும் அரசு ஆயுத மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் வீரபத்திரன் சித்த மருத்துவ அறக்கட்டளை யினர் செய்திருந்தனர்.
Next Story

