சுப்பரமணிய சுவாமி கோவிலில் பால் அபிஷேகம்

X
உளுந்துார்பேட்டை சுப்பரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி பாலபிஷேகம் நடந்தது.பக்தர்கள் பஸ் நிலையம் அருகே உள்ள குளக்கரையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக பால் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, சாரதா பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்மா விகாச ப்ரியா அம்பா, யாக்னா ப்ரானா மாஜி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெய்சங்கர், நகராட்சி கவுன்சிலர் மாலதி ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

