கடன் பிரச்சனை. டிரைவர் தற்கொலை

X
மதுரை மாவட்டம் பேரையூர் ஏழுமலை நடுத்தெருவில் வசிக்கும் செல்லம் என்பவரின் மகன் காளிராஜன் (51) இவர் ரெட் டாக்ஸி டிரைவராக திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவர் விபத்தில் சிக்கியதால் இவரது கார் கடன் அடைக்க முடியாமல் இருந்தார். தொடர்ந்து மதுவுக்கு அடிமையானதால் கடன் அடைக்க முடியவில்லை. கடந்த 14ஆம் தேதி மனைவி பூங்கொடிக்கு தகவல் தெரிவிக்காமல் தனது சொந்த ஊரான ஏழுமலைக்கு வந்து பிரிதிவி லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருக்கிறார். நேற்று முன்தினம் (ஆக.14) இரவு 10 மணி அளவில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து எழுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story

