சட்ட விரோதமாக மது விற்ற நபர்கள் கைது.

சட்ட விரோதமாக மது விற்ற நபர்கள் கைது.
X
மதுரை அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை புறநகர் பகுதிகளில் சுதந்திர தினத்தன்று சட்ட விரோதமாக மது விற்பனை குறித்து போலீசார் ஆய்வு மேற் கொண்டதில் தனக்கன்குளம் அருகே உள்ள மொட்டை மலை பகுதியில் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலால் போலீசார் தனக்கன்குளம் உட்பட்ட வெங்கல மூர்த்தி நகரில் உள்ள எம். ஜி.ஆர். காலனியில் செல்வம் என்பவரது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த உசிலம்பட்டி அருகே உள்ள கன்னியம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (39), வெங்கல மூர்த்திநகர் செல்வம் (45) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் 146 மது பாட்டில் பணம் 5,190 மற்றும் ஒரு செல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story