கோவையில் மினி பஸ் சேவைக்கு பொதுமக்கள் வரவேற்பு !

X
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடங்கப்பட்ட மினி பஸ் சேவைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மருதமலை – துடியலூர் வழித்தடத்தில் இயங்கிய மினி பஸ் சேவை, தற்போது துடியலூர் சந்தை வழியாக என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஸ்டேட் வங்கி காலனி, தொப்பம்பட்டி, கதிர்நாயக்கன்பாளையம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கம் தொடங்கியதை அப்பகுதி மக்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர். மாநகராட்சி கவுன்சிலர் சரவணக்குமார் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் கோவை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இயக்கம் தொடங்கியுள்ளது. முக்கிய அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள், ரெயில் நிலையம் மற்றும் கோவில்கள் வழியாக மக்கள் பயன்பெறுகின்றனர். 15–20 நிமிட இடைவெளியில் பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். புதிய மினி பஸ் சேவையால், நீண்ட நாட்களாக பஸ் வசதி இன்றி இருந்த கிராமப்புற மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

