மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை : கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை : கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டது
X
கனமழை காரணமாக கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தகவல்.
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சூழல் சுற்றுலா தளம் இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைக்குமாறு வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மழை மற்றும் வெள்ள நிலைமை சீரான பின் சுற்றுலா தளம் மீண்டும் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story