கோவை: காங்கிரஸ் கட்சியின் மெழுகுவர்த்தி கண்டன ஊர்வலம்

கோவை:  காங்கிரஸ் கட்சியின் மெழுகுவர்த்தி கண்டன ஊர்வலம்
X
வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் ஈடுபட்ட பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருமத்தம்பட்டி பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் ஈடுபட்ட பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருமத்தம்பட்டி பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையின் அறிவுறுத்தலின்படி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.செல்வப்பெருந்தகையின் வழிகாட்டுதலின் படி நடைபெற்ற இந்த ஊர்வலத்தை, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகர் தலைமையேற்றார். கருமத்தம்பட்டி பேருந்து நிலையம் முன்பு துவங்கிய ஊர்வலம் சோமனூர் சாலை, அன்னூர் சாலை, அவினாசி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது.
Next Story