நாட்டில் சாதி, மத பாகுபாடுகள் நீங்கினால் மட்டுமே உண்மையான சுதந்திரம் கிடைக்கும் - நடிகர் பாக்யராஜ் !
கோவை மாவட்டம் சூலூரில் 79வது சுதந்திர தின விழா பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாக்யராஜ், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சுயசரிதையில் இடம்பெற்ற சாதி பாகுபாடு சம்பவத்தை எடுத்துரைத்து, சமத்துவம் மலர்ந்தாலே உண்மையான சுதந்திரத்தை உணர முடியும் என வலியுறுத்தினார். நிகழ்ச்சி முடிவில் மாணவர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
Next Story



