துபாய்–கொச்சி ஸ்பைஸ் ஜெட் விமானம் கோவையில் தரையிறக்கம் : உணவு, தண்ணீரின்றி பயணிகள் அவதி – வாக்குவாத காட்சிகள் வைரல்
கேரளாவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கொச்சி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் பல்வேறு விமானங்கள் மாற்றி அனுப்பப்பட்டன. துபாயிலிருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால் பயணிகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்படாமல் நீண்ட நேரம் விமானத்தில் காத்திருக்க நேர்ந்ததால், அவர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 2 மணிக்கு பேருந்து மூலம் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்வின் செல்போன் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story




