திருச்செங்கோடு தூய்மை பணியாளர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம் பணிக்காலத்தில் உயிரிழக்க நேரிட்டால் 10 லட்சம், மற்றும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட ஆறு வகையான திட்ட பலன்களைஅறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் 250ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்து நகராட்சி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம். முன்னதாக திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த தூய்மை பணியாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்க, எங்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய முதலமைச்சர் வாழ்க என வாழ்த்து முழக்கம் எழுப்பியபடி வந்தனர். நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி,மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு,நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு,கிழக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் முன்னாள் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சேரன் சக்திவேல், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜா, முருகேசன், சுரேஷ்குமார், செல்வி ராஜவேல், புவனேஸ்வரி உலகநாதன், செல்லம்மாள் தேவராஜன்,சினேகா ஹரிகரன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுடன்தங்கள் மகிழ்வை கேக் ஊட்டி பரிமாறிக் கொண்டனர். மகிழ்ச்சியுடன் தங்களுக்கான அறிவிப்புகளை கொண்டாடி மகிழ்ந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் திரைப்படம் பார்க்க செல்வதாக கூறியதை அடுத்து நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஏற்பாட்டின் பேரில் 250 பேர் கூலி திரைப்படம் பார்க்க அனுப்பி வைக்கப் பட்டனர்.
Next Story




