கோவையில் ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடிகள் கைது – கஞ்சா, பட்டாக்கத்தி, அரிவாள் பறிமுதல் !

X
கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் ரோந்து சென்ற போலீசார், மதுரையைச் சேர்ந்த மூன்று ரவுடிகளை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் அரிவாள், பட்டாக்கத்தி, பேனா கத்தி, ஸ்குரு டிரைவர் உள்ளிட்ட ஆயுதங்களும், 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்கள் கருப்புசாமி (24), சந்தோஷ்குமார் (20), பிரவீன் (19) என தெரியவந்தது. இவர்களில் கருப்புசாமி மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள், கல்லூரி மாணவரை இரவு நேரத்தில் கொடுமையான ஆயுதங்களுடன் துரத்த முயன்றது விசாரணையில் வெளிச்சமிட்டது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். துணிச்சலுடன் குற்றவாளிகளை பிடித்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவுகிறது.
Next Story

